ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

MBBS படிப்புக்கான பாடங்கள்

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவைச் சிகிச்சையியல்) படிப்புக்கான பாடங்கள்

(4ஆண்டுகள் படிப்பு + 1 ஆண்டு பயிற்சி)

 

முதலாமாண்டு

1.உடற்கூறியல்,

2.உடலியங்கியல்,

3.உயிர்வேதியியல்


இரண்டாமாண்டு

1.நோயியல்,

2.மருந்தியல்,

3.நுண்ணுயிரியல்


மூன்றாமாண்டு

1.தடயவியல் மருத்துவம் & நச்சுயியல்

2.கண் மருத்துவம்,

3.காது மூக்கு தொண்டை மருத்துவம்,

4.சமுதாய நோய்த்தடுப்பு மருத்துவம்


நான்காமாண்டு

 1.பொது மருத்துவம்,

2.பொது அறுவை மருத்துவம்,

3.பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவம்,

4.விருப்பப் பாடம்

(குழந்தை மருத்துவம்,

 எலும்பியல்,

 மயக்கவியல்,

 கதிரியக்கவியல்,

 தோல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்று)


ஐந்தாமாண்டு

 (மருத்துவராகப் பயிற்சி செய்தல்)

=============================


Subjects for MBBS (Bachelor of Medicine and Bachelor of surgery) course


  First year

 1. Anatomy,

 2.Physiology,

 3. Biochemistry


 Second year

 1. Pathology,

 2. Pharmacology,

 3. Microbiology


 Third year

 1.Forensic Medicine & Toxicology

 2. Ophthalmology,

 3. Otorhinolaryngology,

 4. Community preventive medicine


 Fourth years

  1. General Medicine,

 2.General Surgery,

 3. Gynecology and Obstetrics,

 4. Optional subject

 (Any one of the topics like

pediatrics,

orthopedics,

anaesthesiology,

radiology,

dermatology,

Psychiatry)


 Fifth years

  (practicing as a doctor)

 =============================


 Subject Topics Tamilization:

 Su Mahendran PhD (Linguist)

பாடத் தலைப்புகள் தமிழாக்கம்:

சு.மகேந்திரன் PhD (Linguist)


MBBS படிப்புக்கான பாடநூல்களைப் பதிவிறக்க

பதிவிறக்க இணைப்பு 1 https://spdfedu.blogspot.com/p/medical.html?m=1#YEARWISE%20MBBS%20STUDY%20MATERIALS


பதிவிறக்க இணைப்பு 2 https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கொங்கு நாடும் மக்களும்...

எது கொங்கு மண்டலம்? கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் யார்? திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே உள்ள வைகாவூரைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலையை வடக்கெல்லையாகவும் கொண்ட நிலப்பரப்பே கொங்கு மண்டலம்.. அதாவது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களும், திண்டுக்கல் மாவட்ட வடக்குப்பகுதி, கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம்.. காவிரிக்கு வடக்கேயும் கிழக்கேயும் உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இந்த மாவட்டங்கள் மழநாடு என்றும் தகடூர்நாடு என்றும், தலைநீர்நாடு என்றும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளன.

காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம் பகுதிகளில் உள்ள கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.. காவிரிக்குத் தெற்கில் உள்ள கொங்கு வெள்ளாளர்களும் 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழராட்சிக்காலத்தில் சோழ மன்னர்களால் சோழ நாட்டிலிருந்தும் தொண்டை நாட்டிலிருந்தும் விவசாயம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்...

800 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... 400 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலும், 150 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்திலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் இருபக்கமும் உள்ள நிலங்களை கடந்த 50 ஆண்டுகளுக்கு உள்ளாக வன்னியர்களிடமிருந்தும் பிற சாதியினரிடமிருந்தும் கொங்கு வெள்ளாளர்கள் வாங்கி குடியேறியுள்ளனர்... சேலம் தரும்புரி மாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்கு குலதெய்வக் கோயில்கள் கிடையாது .. அனைவரும் குலதெய்வக் கோயில்களைத்தேடி தெற்கேதான் செல்கின்றனர்..

சேலம், தருமபுரி மாவட்டங்களில் கிராமங்களில் வன்னியர்கள் 80% உள்ளனர்... நகரங்களில் வன்னியர், முதலியார், கன்னட தேவாங்க செட்டியார் போன்றோர் உள்ளனர்... கொங்கு வெள்ளாளர்கள் மிகச் சிறுபான்மை மக்களாக ஆங்காங்கு, 10, 20 குடும்பங்களாக மட்டுமே உள்ளனர்...

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள் கரூர் மாவட்ட மேற்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கொங்கு வெள்ளாளர் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் மட்டுமே கொங்குவெள்ளாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் வன்னியர்களே பெரும்பான்மை....

1975 க்கு முன்பு வரை வெள்ளாளர் என்றும், வெள்ளாளக் கவுண்டர் என்றும்தான் அழைக்கப்பட்டார்கள்.. அதன்பிறகு கொங்கு வேளாளர் என்று அரசு கெசட்டில் மாற்றிக்கொண்டார்கள்....

ஒட்டுமொத்த கொங்கு வெள்ளாளர்களும் பிற்கால சோழராட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் கொங்கு மண்டலத்தின் காங்கேயம் , பெருந்துறை பகுதிகளுக்கு குடியேறி அங்கிருந்து பிறகு பரவியுள்ளனர்... கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் கொங்கு வெள்ளாளர் அல்ல..

ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....

காவிரிக்குக் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வேட்டுவர்கள்.. காவிரிக்கு வடக்கே உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வன்னியர்கள்... வன்னியர்களுக்கு இப்பகுதிகளில் எல்லா இடங்களிலும் குலதெய்வக் கோயில்கள் உள்ளன....

கொங்கு 24 நாடுகள் என்ற கதையெல்லாம் கொங்கு வெள்ளாளர் குடியேற்றத்திற்குப் பிறகு தோன்றிய வரலாற்றுக் கதைகள்....

நாடு என்றால் பரந்த நிலப்பரப்பு, அதனை ஆளும் மன்னர், படைவீரர் ஆகிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்...

கொங்கு வெள்ளாளர்கள் சொல்லும் 24 நாடுகள் என்பவை நாடுகள் அல்ல.. அவை கொங்கு வெள்ளாளர்கள் குடியேறிய கிராமங்கள். கொங்கு வெள்ளாளர் குடியேறி வாழ்ந்த ஒவ்வொரு கிராமத்தையும் நாடு என்றும் கிராமத் தலைவரை( ஊர்த் தலைவர்) நாட்டார் என்றும் சொல்லியுள்ளனர்...

  • சோழன் பூர்வ பட்டயம்*

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் . சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . (மண்ணாடி-நில தலைவன் ).

  • கூட்டப் பெயர்கள்*

வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் : '...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து .., (1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு ) '..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..' (ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் ) இக்கல்வெட்டு அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம் நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம் குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை) தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம் போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது . '...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..' (காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி ) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள். வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள்.

திங்கள், 13 ஜனவரி, 2020

கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.

கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.




10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.
1.                     http://keepvid.com/    you tupe downlode saftwer.

11. எவ்வாறு  குறுஞ்செயலி உருவாக்குவது?
https://www.youtube.com/watch?v=qb2n5Yr_zys
3.      https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8)  - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி.

12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது?
https://www.youtube.com/watch?v=UgiQXOk_M2U
  2.       https://www.youtube.com/watch?v=DFFPwucs3Bc (NHM Writter)
    3.   https://speechnotes.co/
13. தமிழில் மின் நூல் உருவாக்குவது
https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
14. எவ்வாறு மின்னூலை கூகுள் பிளேவில் இணைபது
https://www.youtube.com/watch?v=DyYvqsJcrSs
15. இணையம் என்றால் என்ன? அதன் பயன்பாடு
https://www.youtube.com/watch?v=FIIEZscplec

16. தமிழில் ஃபுரகிராம் உருவாக்குவது
https://www.youtube.com/watch?v=zCNPwhRw2aY
17. தமிழில் OCR முறையில் உருவாக்குவது
www.youtube.com/watch?v=Kx3XJKYVKWs
18. தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது
1. https://www.youtube.com/watch?v=GutxOJLVy_c
2. https://www.youtube.com/watch?v=QIsizu-Y3TY
19. தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி
1.      https://www.youtube.com/watch?v=L-Fa-dxsRp0
2.   https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw (தமிழில்)

20. தமிழ் கற்றல் கற்பித்தல் இணையதளம் & வலைப்பதிவு
1.      http://www.tamilvu.org
2.      http://www.southasia.sas.upenn.edu/tamil/index.html
3.      www.tamilacademy.com/
4.      http://www.tamilunltd.com/
5.      http://www.thamizhagam.net/about/aboutus.html
6.      http://www.tamilmitra.com/showpage?pageid=ta.home
7.      http://tamilcube.com/
8.      http://ta.vikaspedia.in/education
9.      http://edu.tamilclone.com/
10.   https://chalkpiece.wordpress.com/
11.   http://thirutamil.blogspot.in/2011/10/2.html
21. தமிழ் இணைய நூலகங்கள்
1.   www.tamil.net
2.   www.tamilvu.org
3.   www.noolagam.com
4.   www.chennailibrary.com
5.   www.ulakathamizh.org
6.   www.dli.iit.ac.in
7.   www.tamilheritage.org
8.   http://ilakkiyam.com/
22. தமிழ் எழுத்துரு மாற்றிகள்
1.   www.suratha.com/reader.htm
2.   www.higopi.com/adhiyaman
3.   http://kandupidi.com/converter/
4.   www.sillampum.com/tamil-unicode-converter.html
5.   http://www.islamkalvi.com/web/bamini2unicode_converter.htm
6.      http://software.nhm.in/products/converter
7.   http://www.tamillexicon.com/uc/bamini-unicode
8.      www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml
9.     tamil24news.com/links/font/bamini2unicode.html

            23. தமிழ் கணினிச் சார்ந்த இணையப்பக்கம் & வலைப்பதிவு.
          1.   http://www.techtamil.com/
          2.   http://www.zapmeta.co.in/
          3.   http://bestkulam.blogspot.in/
          4.   http://www.tamilkurinji.in/Technology.php
          5.   www.thozhilnutpam.com
          6.   www.suduthanni.bolgspot.in
          7.   www.tvs50.blogspot.in
          8.   www.pkp.blogspot.
                       9.      www.kaniyam.com/team/
                   10.  www.tamilarwiki.blogspot.in
                    11.  http://www.gnu.org/
                   12.  http://ilawasamenporul.blogspot.in
                   13.  http://ezilnila.com/archives/3031
         24. இணையப் பயன்பாடு புள்ளிவிபரக் கணக்கு
            http://www.internetworldstats.com/facebook.htm

        25. வலைப்பதிவு மொத்த லிஸ்ட்.
              http://www.valaitamil.com/tamilsites/
        26. கணினித் தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள்.
1..www.cict.org

27. ஆண்ட்ராய்டு உருவாக்கம்.
1. https://www.b4x.com/
2. https://apps.evozi.com/apk-downloader/
28. சொற்களைக் கண்டறியும் தளம்
1. http://www.tamilpulavar.org/
2. http://www.phdpostdoc.com/
29. apps உருவாக்கம் வலைப்பக்கம்.
1.   https://ibuildapp.com/
2.   https://www.appypie.com/
3.   https://www.youtube.com/watch?v=wYlYGwUYRao
4.   https://www.youtube.com/watch?v=9Uv5cf1L-cY

30. ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதளம்.
http://www.easyhindityping.com/tamil-to-english-translation

செவ்வாய், 19 நவம்பர், 2019

வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :

வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :

முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. 

                                                       சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது.

பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       

                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. 

குடியேறிய வேளாளர்கள் அங்குள்ள வேடர்களிடம் ரத்தக்கலப்பை கொண்டு , அவர்களின் கூட்டு பெயர்களை இவர்களும் வைத்துகொண்டனர் .

 இதன் பிறகே , அதாவது சுமார் 10-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். 

வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. 

சோழ நாட்டில் உள்ள விவசாய குடிகளான வெள்ளாளர்களில் இருந்து கொங்கு நிலத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள வேடவர் ஆயர்களுடன் ரத்தக்கலப்பை ஏற்படுத்திக் கொண்ட இனம் கொங்கு வெள்ளாளர் இனம் ..

அதற்க்கு முன்பு சோழ நாட்டில் விவசாய குடியாக சோழிய வெள்ளாளர் மற்றும் பள்ளர்களே இருந்தனர் எனலாம் ..

இவர்களில் இருந்து சென்ற இனம் கொங்கு வெள்ளாளர் ..

கொங்கு பகுதிக்கு சென்றதால், இவர்கள் "கொங்கு வெள்ளாளர் " என்று அழைக்க பட்டனர் ..

அதாவது  பிற்கால சோழர் ஆட்சி தொடங்கி சாளுக்கிய சோழர்கள் ஆட்சி செய்யும் காலம் உருவாகும் போதுதான், "கொங்கு வெள்ளாளர் " என்ற தனி இனமும் கொங்கு நிலத்தில் உதையமாகிறது  ..

சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுவது :

சோழன் நாட்டில் இருந்து சேரநாட்டிற்கு (கொங்கு பகுதி ) வந்தேறிய வெள்ளாளர்கள் , அப்பகுதியின் பெயரை அடையாளமாக கொண்டு கொங்குநாட்டு வெள்ளாளர் (அ ) கொங்கு வெள்ளாளர் என்று அழைக்கலாயினர் ..

கொங்கு நாட்டில் உள்ள வெள்ளாளர்கள் பெரும்பான்மையினோர் சோழநாட்டின் செந்தழையில் இருந்து வந்தமையால் , இன்றும் அவர்கள் செந்தாழை வெள்ளாளர் என்று அழைக்கபடுவதும் உண்டு .

இவ்விதமாக கொங்கு வெள்ளாளர் குடியேற்றம் பற்றி சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுகிறது  

கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை
உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை
சிறிது தாழ்ந்தது.

சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. 

வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின.

வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.

திங்கள், 18 நவம்பர், 2019

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு...

வன்னியர்களான சோழமன்னர்களால் சோழநாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் 900 ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்குமண்டல பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள்தான் தற்போதைய கொங்கு வெள்ளாளர்கள்.
இவர்களின் பூர்வீகம் கொங்குமண்டலம் அல்ல.
வன்னியர்களான சோழர் மன்னர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்த கொங்கு வெள்ளாளர்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார கொங்கு வெள்ளாளர்கள் பிற்காலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.
இவர்கள் காவிரிக்கு வடக்கே குடியேறிய பிறகு காவிரிக்குத் தெற்கிலுள்ள கொங்கு வெள்ளாளர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமல் நாட்டுக்கவுண்டர் என்ற பெயரில் தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர். நாமக்கல் மாவட்ட கொங்கு வெள்ளாளர்கள் அனைவருமே காவிரிக்குத் தெற்கே இருந்து காவிரிக்கு வடக்கே பிற்காலத்தில் குடியேறியவர்கள்தான்.

பிறகு அங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பகுதிக்கு குடியேறியுள்ளனர்.
இங்கிருந்து பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தருமபுரி பகுதிக்கு பஞ்சம் பிழைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.

400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
40 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.

காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இப்பகுதி மழநாடு. வன்னியர் மண்டலம்.
இங்குள்ள கொங்குவெள்ளாளர்கள் வந்தேறிகள்.

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள், கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகிய பகுதிகள் மட்டுமே கொங்குநாடு. இந்த கொங்கு பகுதியின் பூர்வ குடிமக்கள் வேட்டுவர்கள்..

கொங்கு வெள்ளாளர்கள் கொங்கு மண்டலத்தில் குடியேறிகள்......

ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .

சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை  வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
(மண்ணாடி-நில தலைவன் ).

வெள்ளாள சாதியினர் ,வேட்டுவ இனத்தை அண்டிப் பிழைத்தவர்கள்.
இன்று கொங்கு நாட்டில் வெள்ளாள சாதியினர் வழிபாடும்  அனைத்து காளி கோயில்களும் வேட்டுவ இனத்தை ஏமாற்றி  வெள்ளாள சாதியினர் உரிமையாக்கிக் கொண்டவையாகும் . 

கிபி 1975 களில் "வெள்ளாள சாதி" என்ற பெயரை "கொங்கு வெள்ளாளர்" என்று சாதிகள் பட்டியலில் கொண்டுவந்தனர். அதற்கு முன்பு கொங்கு வெள்ளாளர் என்ற பெயர் கிடையாது. வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக்கவுண்டர் என்றுதான் சொல்வார்கள்.

இந்த கொங்கு மண்டத்தில் குடியேறிகளான கொங்கு வெள்ளாள சாதிக்குத் தனியாக "கொங்குநாடு" என்ற பெயரில் தனிமாநிலம் வேண்டுமாம். 
ஒவ்வொரு சாதிக்கும் தனிமாநிலம் பிய்த்துக்கொடுப்பதற்குத் தமிழ்நாடு ஒன்றும் பஞ்சுமிட்டாய் அல்ல.


புதன், 12 ஜூன், 2019

தமிழ்நாட்டில் தெலுங்கர் குடியேற்றம்

*தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் எப்படி குடியேறினார்கள்???*

1311 ல் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு விஜயநகர அரசன் குமாரகம்பணன் உட்பட தெலுங்க நாயக்கர்கள் முஸ்லிம் படைகளை விரட்ட பாண்டியர்களுக்கு உதவிசெய்வதாகச் சொல்லித்தான் வந்தார்கள்.
ஆனால் பாண்டியர்களோடு சேர்ந்து முஸ்லிம் படைகளை விரட்டிவிட்டு மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அந்த தெலுங்கர்களே கைப்பற்றிக் கொண்டார்கள். பாண்டியர்களை தென்காசி சீமைக்கு விரட்டிவிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் பாண்டியரும், சோழரும் மாறிமாறி மதுரையைக் கைப்பற்றி ஆண்டனர்.

மீண்டும் 1529 ல் விசுவநாத நாயக்கன் என்ற தெலுங்கன் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டான். அவன் வழிவந்த நாயக்க மன்னர்கள் தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டனர்.
தக்காண சுல்தான்கள் 1564 ல் விஜயநகரத்தைத் தாக்கி எரித்த போது உயிருக்குப் பயந்து அகதிகளாக நாயுடு, ரெட்டியார், சக்கிலியர் ஆகிய தெலுங்கு சாதியினர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறினார்கள்.
அப்போது உயிருக்குப் பயந்து அகதிகளாக கன்னட சாதியினரும் தமிழ்நாட்டிற்குக் குடியேறினர்.

அந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் பாளையப்பட்டு முறையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்து தமிழர்களின் நிலங்களை எல்லாம் அபகரித்து அந்தத் தெலுங்கர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். பள்ளர், பறையர் உள்ளிட்ட தமிழ்க்குடிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பண்ணை அடிமையாக்கினர். சாதிய ஏற்றத் தாழ்வையும் தீண்டாமையையும் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்.

கோயில்களில் தெய்வப்பணி செய்து மிகப் புனிதமானவர்களாகப் போற்றப்பட்டுவந்த தேவரடியார்களை இழிவுபடுத்தி விலைமாதர்களைக் கோயில்களில் நியமித்து தேவதாசி முறையைக் கொண்டுவந்தார்கள். தெலுங்க நாயக்கராட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கோயில்களில் விலைமாதர்களான தேவதாசிகள் கிடையாது. தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு. தேவரடியார்கள் கோயிற்பணி செய்த புனிதமானவர்கள். தேவதாசிகள் விலைமாதர்கள்.
தமிழ்ப் பார்ப்பனர்களைக் கோயில்களிலிருந்து விரட்டிவிட்டு தெலுங்க பிராமணர்களைக் குடியேற்றி நியமித்தார்கள்.

இப்போது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5.7% தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.
அந்தத் *தெலுங்கர்கள்தான் இப்போது திராவிடர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.*

*பெரியார் தெலுங்கன்,* பலிஜா நாயுடு சாதி,

*அண்ணாதுரை தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,

*கருணாநிதி தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,

*எம்ஜிஆர் மலையாளி,* மேனன் சாதி,

*ஜெயலலிதா கன்னடச்சி,* சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா என்ற பிராமண சாதி,

*விஜயகாந்த் தெலுங்கன்,* நாயுடு சாதி,

*வைகோ தெலுங்கன்,* நாயுடு சாதி.

*கி.வீரமணி*, அஸ்த்திர கொல்லா என்னும் தெலுங்க யாதவா சாதி.

இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா????